தமிழ்நாடு

தஞ்சாவூர் ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி!

DIN

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை சமாதானம் செய்வதற்காக மேகராஜ் அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு மேகராஜை மனைவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து விரட்டினர். 

இதுகுறித்து, நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் செய்தார். இவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இவரை காவல் துறையினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை முற்பகல் வந்த மேகராஜ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த காவல் துறையினர் விரைந்து வந்து மேகராஜை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், விசாரணை செய்வதற்காகத் தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT