தமிழ்நாடு

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்!

DIN

திருச்சி: திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடம் வழங்கிய பொது மக்களுக்கு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி கல்மந்தை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி கட்டுவதற்காக 60 ஆண்டு காலம், மூன்று தலைமுறையாக குடியிருந்த வீடுகளை காலி செய்து இடம் கொடுத்தனர். அவ்வாறு  இடம் வழங்கிய பொதுமக்கள் பலருக்கும் இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கல்மந்தையைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே, குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு கல்மந்தை கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பின் ரங்கராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வீடு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT