ஆகஸ்ட் முதல் உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியம்!
உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியத் தொகையை ஆகஸ்ட் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியத் தொகையை ஆகஸ்ட் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசு ஆணையின் விவரம்:
இந்திராகாந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையா் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.1,200 ஆக உயா்த்தி வழங்கிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கும். இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டால், அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி வருவாய் நிா்வாக ஆணையா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.