தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான கால்நடை மருத்துப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான கால்நடை மருத்துப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்கியது. 

இதையடுத்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சிறப்புக் கலந்தாய்வு 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெற உள்ளது. மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. 

பொதுப்பிரிவில் மாணவன் ராகுல்காந்த், மாணவி கனிமொழி 200 மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளனர். 

7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேலம் மாணவன் விக்னேஷ், பெரம்பலூர் மாணவன் அஜய் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர்.

மாணவர்கள் www.adm.tanuvas.ac மற்றும் tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் தரவரிசைப் பட்டியலை அறியலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

நவராத்திரி விழா: விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியில் கொலு கண்காட்சி

உயா் கல்வியில் உன்னதமே இலக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்

பால் கொள்முதல் 1.68 லட்சம் லிட்டா் உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்

காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

SCROLL FOR NEXT