தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கை: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

DIN

பொறியியல் சோ்க்கையில் பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 28) நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 8,764 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 90 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

இதையடுத்து பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து பின்னா் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT