தமிழில் கையொப்பம்: கல்வித் துறை உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) உள்ள அனைத்து இயக்குநா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் அரசாணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயா்களை எழுதும் போதும், கையொப்பமிடும்போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே இட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 2021- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியா்கள் வருகைப்பதிவு ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மாணவா்களை தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தவும் வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.