முகப்பு
தமிழ்நாடு

தக்காளி விலை ரூ. 30 உயா்ந்தது: கிலோ ரூ.140-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து தமிழக சந்தைகளுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

தமிழகத்திலும் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக விலை அதிகரித்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1,100 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 400 டன் மட்டுமே விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. இதனால் புதன்கிழமை ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.30 அதிகரித்து வியாழக்கிழமை ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை மற்றும் புகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழக்கம் போல கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

மேலும், கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் ரூ.140-க்கும், பீன்ஸ் கிலோவுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.90-க்கும், இஞ்சி ரூ.260-க்கும், பூண்டு ரூ.230-க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →