தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,444 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரு அணைகளும் நிரபும் தருவாயில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை இரவு வினாடிக்கு 2,100 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, வியாழக்கிழமை காலை வினாடிக்கு 3,343 கனாடியாகவும், மாலை 10,232 கன அடியாகவும் அதிகரித்தது.

மேட்டூர் அணைக்கு கரை புரண்டு வரும் காவிரி நீர் 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,444 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

நேற்று மாலை 64.80 அடியாக சரிந்து இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 64.90 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 28.47 டிஎம்சியாக உள்ளது.

சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ள மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரை புரண்டு வரும் காவிரி நீரில் கரை ஓரங்களில் உள்ள மரக்கிளைகள் அடித்து வரப்படுவதாலும் காவிரி கரையில் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர் பகுதிகளில் முகாமிட்டு மீன் பிடித்து வந்த மேட்டூர் அணை மீனவர்கள் வெள்ளிக்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை.

நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதாலும் மரக்கிளைகள் அடித்து வரப்படுவதாலும் வலைகள் சேதமடையும், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் முகாம்களில் முடங்கி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT