தமிழ்நாடு

ஆம்பூர் அருகே எலக்ட்ரிக் பைக்கில் திடீர் தீ

ஆம்பூர் அருகே சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

DIN

ஆம்பூர் அருகே சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஜங்களாமேடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார். இவர் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து  மளிகை பொருட்களை ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் புதியதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக்கிற்கு இன்று வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனைக்கண்ட சசிகுமார் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீயை அணைப்பதற்குள் தீ முழுவதுமாக பரவி எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. 

மேலும் இதுகுறித்து இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT