தமிழ்நாடு

பொறியியல் படிப்பு: பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது!

DIN

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று  தொடங்கியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 8,764 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 90 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று முதல்  நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 

விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து பின்னா் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இடையே விவகாரத்தா?

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT