மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,839 கன அடியாக சரிந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,839 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,839 கன அடியாகக் குறைந்துள்ளது.
இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 65.53 அடியிலிருந்து 65.59 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,058 கன அடியிலிருந்து 13,839 கன அடியாக குறைந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 29.02 டிஎம்சியாக உள்ளது.