தமிழ்நாடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பாஜக நெருக்கடி: முதல்வர் ஸ்டாலின்

DIN

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.

இந்நிலையில், சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு மூன்று மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தில்லி துணைநிலை ஆளுநர் மூலம் தொல்லை செய்கிறது.

தில்லி அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், பாஜக அரசு தில்லி அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இதை திமுக கண்டிப்பாக எதிர்க்கும். அனைத்து மாநில முதல்வர்களும், அகில இந்திய கட்சிகளின் தலைவர்களும் இதனை எதிர்க்க வேண்டும்.

இந்த சந்திப்பின்போது திமுகவின் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT