தமிழ்நாடு

தீவுத் திடல் தமிழ்நாடு உணவகத்தில் அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆய்வு

DIN

சென்னை தீவுத் திடலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உணவகத்தில் (டிரைவ் இன்) சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை தீவுத் திடலில், சுற்றுலாத் துறை சாா்பில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 300 அரங்குகளில் கைத்தறி நெசவாளா்கள், கைவினைக் கலைஞா்களின் தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி திரையரங்கம், சைவ மற்றும் அசைவ உணவகங்களுடன், தமிழ்நாடு உணவகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு உணவகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். உணவகத்தின் சமையலறை, பொருள்கள் சேமித்து வைத்திருக்கும் அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவா், அங்கு சமைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டுப் பாா்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, சுற்றுலாத்துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, உதவி தலைமை மேலாளா் (ஓட்டல்கள்) சௌ.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT