தமிழ்நாடு

காதணி விழா: கோவையின் அடையாள சின்னங்களுடன் சாரட்டு வண்டியில் அழைத்துவரப்பட்ட சிறுவன்!

கோவையை பெருமைபடுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

கோவை: கோவையை பெருமைபடுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது.

இந்த காதணி விழாவிற்கு கோவையில் அடையாள சின்னங்களான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர். 

கோவையை பொருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவே சண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாக தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT