தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட்!

DIN

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. 

அதன்படி, ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு தொடங்குகிறது. ஜூன் 20ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 26 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 

www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாடுகள் திருட்டு: மூவா் கைது

கனியாமூா் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தனியாா் பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பிளஸ் 1 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 89.41% தோ்ச்சி

SCROLL FOR NEXT