சென்னையில் பரபரப்பு..! தண்டவாளத்தை விட்டு இறங்கிய ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!
ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றபோது பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயிலின் 2 சக்கரங்களும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில் ஓட்டுநரின் நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.