தமிழ்நாடு

புதுச்சேரி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

புதுச்சேரி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

புதுச்சேரி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி திருக்கனூர் அருகே வம்புபட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் (88). விவசாயி மனைவி, மகன் சுந்தர் (43) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஞாயிறு இரவு குடிபோதையில் தனது மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுந்தர் கோபமடைந்து தந்தையை கதவில் தள்ளியுள்ளார். இதனால் சுப்புராயன் கீழே விழுந்து மயக்கமானார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மயக்கமான நிலையில் கிடந்த சுப்புரையனை எழுப்பிய போது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு வந்து சுப்புராயன் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுந்தரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT