அண்ணாமலை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம்: அண்ணாமலை

கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN


கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை தான் நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 

மோடியின் அரசியல் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். எனது மனசாட்சிப்படி தமிழகத்தில் நான் அரசியல் செய்து வந்துள்ளேன். தமிழகத்தில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காகவும் அரசியலை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன்.

தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவு கொள்கைகளை அடமானம் வைக்க விரும்பவில்லை. 

கூட்டணிக் கட்சியையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் வழிநடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் கூற முடியாது.

கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதை நாங்களும் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. தலைமை செயலகத்தில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி வருவது இது முதல்முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT