முகப்பு
தமிழ்நாடு

கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறப்பு!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை  திறக்கப்படவுள்ளது.

Updated On : 14 ஜூன் 2023, 9:36 am IST
கல்லணை
பகிர்:

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை  திறக்கப்படவுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி காலை திறந்து வைத்தாா். அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை காலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. கல்லணைக்கு காவிரி நீர் வியாழக்கிழமை இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

இதில், டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்வா் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments