தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: மாணவ,மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்புகள் வழங்கி வரவேற்ற போக்குவரத்து போலீசார்!

DIN

கோவில்பட்டி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியதை அடுத்து புதன்கிழமை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்தி வரவேற்றனர் கோவில்பட்டி போக்குவரத்து போலீசார்.

குழந்தைகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்தி வரவேற்று பள்ளிக்குள் அனுப்பி வைக்கும் போலீசார்.

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு புதன்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கியதை அடுத்து பள்ளி மாணவர் மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து அவர்கள் பயிலும் பள்ளிகள் விட்டு சென்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் சிறப்பு உதவியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போக்குவரத்து போலீசார் குழந்தைகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்தி வரவேற்று பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். 

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வழியே செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைக்கும் போலீசார். 

மேலும் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை கொடுத்து வாழ்த்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இறை வணக்கம் கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து போலீசார், தலைமை ஆசிரியர் சுப்பராயன் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT