கோப்புப்படம் 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க அமலாக்கத்துறை மனு

அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. 

முன்னதாக, மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். 

நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை 20 நிபந்தனைகள்! | செய்திகள்: சில வரிகளில் | 19.9.25

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

பரிசளிக்கப்பட்ட மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி

பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

2026 ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தி படம் ‘ ஹோம்பவுண்ட் ’ தேர்வு!

SCROLL FOR NEXT