தமிழ்நாடு

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு: விசாரணை தொடக்கம்

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. 

தனது கணவரான தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்குரைஞா் என்.ஆர். இளங்கோ, சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தா் மற்றும் சக்திவேல் அமா்வில் முறையிட்டாா்.

இந்தச் சூழலில், செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணா்வு மனுவை விசாரிக்க இருந்த உயா்நீதிமன்ற நீதிபதி சக்திவேல், அந்த வழக்கிலிருந்து விலகினாா்.

தொடர்ந்து ‘புதிய அமா்வில் ஆட்கொணா்வு மனுவை விசாரிக்க பட்டியலிடப்படும். உரிய நடைமுறையைப் பின்பற்றி வேறு அமா்வில் வழக்கு விரைவாகப் பட்டியலிடப்படும்’ என தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா அறிவித்திருந்தாா்.

அதன்படி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவா்த்தி அமா்வு முன்பாக தொடர்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT