தமிழ்நாடு

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதல்வா் திறந்துவைத்தார்!

DIN

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 15) திறந்துவைத்தார்.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில், ரூ.230 கோடி மதிப்பில் மொத்தம் 4.89 ஏக்கா் நிலப் பரப்பில் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மேலும், 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், அவரது தேதி உறுதி செய்யப்படாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் கிண்டி மருத்துவமனையை இன்று திறந்து திறந்துவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

யாரென்று தெரிகிறதா?

விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

எல்லோருக்கும் தேங்க்ஸ் - சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

SCROLL FOR NEXT