மேட்டூர் அணை: நீர்மட்டம் 99.64 அடியாக சரிவு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.64அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.64அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 651 கன அரயிலிருந்து 547கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியிலிருந்து 99.64அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 64.37 டிஎம்சியாக இருந்தது.