திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படுவதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை, செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி திறந்து வைக்கிறார்.
இதையொட்டி இரவு 12.10 மணிக்கு திருவாரூக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தார். திருவாரூர் சந்நிதி தெருவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார். மேலும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள மேடை நடைபெறும் அரங்கையும் அவர் பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.