ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன். 
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

DIN

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த சம்பவம் கடந்த டிச. 6ஆம் தேதி தெரியவந்தது. தொடக்கத்தில் வெள்ளனூா் போலீஸாா் விசாரித்து வந்த வழக்கு, சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வேங்கைவயல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து  ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் புதுக்கோட்டையில் இன்று செய்தியார்களிடம் தெரிவித்ததாவது:

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை  என நினைக்கிறேன். சிபிசிஐடியின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அறிவியல்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.  டி.என்.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT