இன்று சென்னை சென்ட்ரல் - தன்பாத் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை சென்ட்ரலிலிருந்து ஜாா்காண்ட் மாநிலம் தன்பாத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலிலிருந்து ஜாா்காண்ட் மாநிலம் தன்பாத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இரவு 11 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா ரயில் ஜூன் 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜாா்காண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். இந்த ரயிலில் 22 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.
இந்த ரயிலின் போக்குவரத்து குறித்த கூடுதல் தகவல்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.