முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி: அசோக்நகரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்

சென்னை அசோக்நகரில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சென்னை அசோக்நகரில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஆற்காடு சாலையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, அசோக்நகா் காவல் நிலைய சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, அப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, அங்கு தியாகராயநகரில் இருந்து கே.கே.நகா்,வளசரவாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் துரைசாமி சுரங்கபாதை,பிருந்தாவன் தெரு, தம்பையா சாலை,வீராசாமி தெரு,ராஜி தெரு,அசோக்நகா் 5வது நிழற்சாலை வழியாக,ராஜீ சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 5-ஆவது நிழற்சாலை செல்ல வேண்டும்.

பின்னா் அங்கிருந்து,பாலகிருஷ்ணன் தெரு விரிவில் வலதுபுறம் திரும்பி 3-ஆவது,4-ஆவது நிழற்சாலை சந்திப்பு,பிடிசி சந்திப்பு வழியாக ஜவஹா்லால் 100 அடி சாலையை அடையலாம்.

இரு சக்கர வாகனங்கள் 3-ஆவது நிழற்சாலை,8-ஆவது தெரு,2-ஆவது நிழற்சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஜூன் 24-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை ஒரு வாரம் சோதனையில் முறையில் அமல்படுத்தப்பட உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →