தமிழ்நாடு

தலைவாசல் அருகே கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது: 300 லிட்டர் சாராயம் பறிமுதல் 

DIN

சேலம்: தலைவாசல் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்  அதிக அளவில் காய்ச்சப்பட்டு லாரி டியூப்புகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து தலைவாசல் நத்தக்கரை,மணிவிழுந்தான், ராமசேசபுரம், சார்வாய்புதூர், மணிவிழுந்தான் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் வந்ததது.  

இதையடுத்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்த போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மணிவிழுந்தான் அருகே ராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35) சேகர்( 36) மோகன் (37) என்பதும் அவர்கள் சாக்கு மூட்டையில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது,

இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து பின்னர் அவர்களிடம் இருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் மூன்று இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்பசுக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கடலோரக் கிராமங்களில் தீவிர பிரசாரம்

பொன்னமராவதி அருகே அம்மன் கோயிலில் கரகம் எடுப்புத் திருவிழா

திருக்களம்பூரில் மஞ்சுவிரட்டு

‘வாசிப்பால் ஞானஒளி பிறக்கும்’

மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும்

SCROLL FOR NEXT