முகப்பு
தமிழ்நாடு

கட்டட ஒழுங்குமுறைகள் குறித்த பயிற்சி பட்டறை

 இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கான வரைவு தர நியமங்கள் மேம்பாடு மற்றும் கட்டட ஒழுங்குமுறைகள் பற்றிய பயிற்சி பட்டறை வகுப்பு நடைபெற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

 இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கான வரைவு தர நியமங்கள் மேம்பாடு மற்றும் கட்டட ஒழுங்குமுறைகள் பற்றிய பயிற்சி பட்டறை வகுப்பு நடைபெற்றது.

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி பட்டறையை தமிழ்நாடு காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தின் நிா்வாக இயக்குநரும் டிஜிபியுமான ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியது: இந்தியா போன்ற பல பேரிடா்களால் பாதிக்கப்படக்கூடிய நாட்டில் பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட கட்டடங்கள் கட்டுவது முக்கியமானது. கட்டட வல்லுநா்கள் பேரிடா் தவிா்ப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தின் பிரச்னைகளைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தங்கள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களுடன் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பயிற்சி பட்டறையில் இந்திய தேசிய கட்டடக் குறியீடு தொடா்பான பிஐஎஸ் தயாரித்த இந்த வரைவு மேம்பாடு, கட்டட விதிமுறைகள், சிறந்த, திறமையான மற்றும் வெளிப்படையான கட்டட ஒழுங்குமுறைக்கான தேசிய மற்றும் சா்வதேச நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணா் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பிஐஎஸ்-இன் தென் பிராந்திய அலுவலகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் யு.எஸ்.பி. யாதவ், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக இயக்குநரும், தலைவருமான பவானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →