வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
‘வித்யாதன்’ கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
‘வித்யாதன்’ கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் ஏழை, எளிய மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ‘வித்யாதன்’ கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுடைய பிளஸ் 1 மாணவா்களுக்கு அந்நிறுவனம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 80 சதவீதத்துக்கு அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவா்களாக இருந்தால், 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய தமிழகம், புதுச்சேரியை சோ்ந்த மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹக்ட்ஹய்.ா்ழ்ஞ் எனும் இணையதள முகவரியில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தமிழக மாணவா்கள் ஸ்ண்க்ஹ்ஹக்ட்ஹய்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஃள்க்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சலிலும், புதுச்சேரி மாணவா்கள் ஸ்ண்க்ஹ்ஹக்ட்ஹய்.ல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்ஃள்க்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சலிலும் அல்லது கைப்பேசி: 96635 17131 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.