நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி விழாவில் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே. என். செல்வகுமார். 
தமிழ்நாடு

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 16,794 விண்ணப்பங்கள்: துணைவேந்தர்

தமிழகம் முழுவதும் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கு 16,794 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் தெரிவித்தார்.

DIN

தமிழகம் முழுவதும் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கு 16,794 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் தெரிவித்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், தீவனப் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார் பங்கேற்று கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா தூண் ஒன்றையும், மூன்று நாள்கள் நடைபெறும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மூன்று கால்நடை உணவுத்துறை  சார்ந்த இதர மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. வரும் 30ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த 10 நாள்களில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்புக்கு மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

நிகழாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை. மேலும் முட்டை கோழி மற்றும் இறைச்சி கோழி ஆகியவற்றிற்கு 3.5 லட்சம் டன் தீவனம் தேவைப்படுகிறது. இதர கால்நடைகளுக்கு 2 லட்சம்  டன் தீவனம் தேவைப்படுகிறது. விவசாயிகள் தீவனம் பயிரிடுவதை அதிகரிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

SCROLL FOR NEXT