தமிழ்நாடு

கோவையில் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்: ஷர்மிளா வேதனை

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

DIN


கோவை: கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷர்மிளா வேதனை
பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷர்மிளா கூறுகையில், தான் விளம்பரத்திற்காக பேருந்தில் ஆள்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியதாக வேதனையுடன் தெரிவித்தவர், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்துதான் பயணித்தனர். 

கனிமொழி பேருந்தில் பயணித்தபோது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன் என தெரிவித்தார்.

சில நாள்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஷர்மிளாவுக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பலராலும் பாராட்டவர் ஷர்மிளா.

பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை​: உரிமையாளர் விளக்கம்
ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை.  அவர் தான் பணிக்கு வரவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் பெண் நடத்துனர் அன்னத்தாயுடன் தான் பிரச்னை. 

எம்.பி கனிமொழி வருவதை முன்கூட்டியே எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பேருந்து உரிமையாளர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT