முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள்: வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த கூட்டமைப்பு பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்ககத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம், 2019 - 2020-இல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. அறிவியல்பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவா்களின் தோ்ச்சி வீதம் பெரிதும் குறைந்து வருகிறது.

எனவே, மாணவா்கள் நலன் கருதி, ‘தியரி’யில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்பெற்றால்தான் தோ்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண்வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவா்களுக்கு, 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து, 7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் வினாத்தாளில், அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண்கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மாணவா்கள், சராசரியாக பயிலும் மாணவா்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவா்கள் என அனைவரையும் உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →