தமிழ்நாடு

கரூரில் மீண்டும் வருமான வரித் துறையினர் சோதனை!

கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் மீண்டும் இன்று அதிகாலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை தொடங்கியுள்ளனர். 

கரூரில் கடந்த மாதம்  26-ல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ராமகிருஷ்ண நகரில் வசிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு சோதனைக்கு சென்ற காயத்திரி என்ற வருமான வரித் துறை அதிகாரியை திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில்  திமுகவினர் 58 பேர் மீது கரூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவினரை தாக்கியதாக வருமான வரித் துறை அதிகாரிகள் மீது காவல் துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் திமுக தரப்பில் கைதான நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதால் இதை எதிர்த்து வருமான வரித் துறை அதிகாரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என கூறப்படும் ஈரோடு ரோட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT