தமிழ்நாடு

தனியாா் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

தென்காசி நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் ஆம்னி பேருந்து, மதுராந்தகம் புறவழிசாலையில் வெள்ளிக்கிழமை காலை கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

DIN

தென்காசி நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் ஆம்னி பேருந்து, மதுராந்தகம் புறவழிசாலையில் வெள்ளிக்கிழமை காலை கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

தென்காசியில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி வந்தது. அதில் 28 பயணிகள் பயணம் செய்தனா். மதுராந்தகம் புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, திடீரென ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பேரூந்து ஓட்டுநா் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.

தகவலறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் உள்ளிட்ட போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

விபத்து குறித்து மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT