தயார் நிலையில் உள்ள தேர். 
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை(ஜூன் 25) தேரோட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க கைலாச வாகன வீதி உலா நடைபெற்றது. இன்று  ஜூன் 24-ம் தேதி சனிக்கிழமை இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

நாளை ஜூலை 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர்.

பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.  ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத  நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டிச் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணை செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.குருமூர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT