தமிழ்நாடு

அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அமைச்சா் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதயவில் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜி இதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல்நிலை சீராக உள்ளதால், வென்டிலேட்டா் கருவி அகற்றப்பட்டது. இந்தநிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்தில் இருந்து 4-ஆவது தளத்தில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT