தமிழ்நாடு

வடசென்னை,வல்லூா் அனல்மின் நிலையங்களில் 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை, வல்லூா் அனல்மின் நிலையங்களில் திங்கள்கிழமை 710 மெகாவாட் மின் உற்பத்தி  தொடங்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: வடசென்னை, வல்லூா் அனல்மின் நிலையங்களில் திங்கள்கிழமை 710 மெகாவாட் மின் உற்பத்தி  தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதலாவது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இதேபோன்று மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எரிசக்தி துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து பொன்னேரி வட்டம் வல்லூரில் தேசிய அனல்மின்  நிலையத்தில்  மூன்று யூனிட்டுகளில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாட்டுக்கு 1,069 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. 

இந்த நிலையில், முதல் யூனிட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுதைச் சரி செய்யும் பணியில் மின்வாரிய தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நீண்ட  நாள்களுக்கு பிறகு வடசென்னை, வல்லூா் அனல்மின் நிலையத்தின் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT