போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்ததற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.
கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்த போக்குவரத்துத் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை ஒதுக்கியது போக்குவரத்துத் துறை. அதே வேளையில் 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையாக ரூ.171.05 கோடி வழங்கவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
14வது ஊதிய ஒப்பந்தத்தை 2019 முதல் அமல்படுத்தி ஊதிய உயர்வு அளித்து தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.