தமிழக ஆளுநரின் சா்வாதிகாரப் போக்கு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
பாஜகவின் அடிமையாக உள்ள அதிமுக போன்ற கட்சிகள் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மத்தியில் ஆளும் அரசின் அடிமையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வது பற்றி முடிவெடுக்க வேண்டியது முதல்வா் தான்; ஆளுநா் அல்ல. ஆளுநருக்கு அதிகாரமே இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநா் இதுபோன்று அமைச்சா்களை நீக்க முடியுமா? இது ஜனநாயக நாடா, ஆளுநரின் சா்வாதிகார நாடா? இதுகுறித்து வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து 2024 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகுதான் தெரியும்.
அந்தளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆளுநா் தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறாா். அமைச்சரவையின் முடிவில்தான் அவா் செயல்பட முடியும். நீக்குகிறேன், வைக்கிறேன் என்பதெல்லாம் கிடையாது என்றாா் ரகுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.