திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்கக் கோரி திருவாரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆறுகளில் போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும், உள்பாசனம் இல்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அனைவரும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.