தமிழ்நாடு

மக்னா யானை ரயிலில் அடிபடாமல் நூலிழையில் உயிர்தப்பியது எப்படி? 

கோவையில் வனத்துறையினருக்கு போக்கு கட்டி வந்த மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

DIN

கோவையில் வனத்துறையினருக்கு போக்கு கட்டி வந்த மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த மக்னை யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி மக்னை யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு, வழியாக மதுக்கரை பகுதியை அடைந்தது. 

கடந்த 21 ஆம் தேதி காலை யானை மதுக்கரை அருகே வாழைத் தோட்டத்தை கடந்து அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் வந்துவிடவே சாதுரியமாக செயல்பட்ட வனத்துறையினர் நொடிப்பொழுதில் யானையை விரட்டினர். இதில் யானை உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கியதில் வேகமாக சென்ற ரயில் தண்டவாளத்தில் கடந்து சென்றது. 

இந்நிலையில், மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதும், திடீரென ரயில் வந்தபோது சாதுர்யமாக செயல்பட்டு வனத்துறையினர்,  யானையை விரட்டி அடித்து காப்பாற்றிய விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT