தமிழ்நாடு

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

DIN


முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்நிலையில், தனது 70 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். 

"முயற்சி.. முயற்சி.. முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

இதனைத்தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT