தமிழ்நாடு

திருமாவளவன் கருத்து: மதிமுக அதிருப்தி

DIN

ஈழ விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துக்கு மதிமுக அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மதிமுக துணைப் பொதுச்செயலா் தி.மு.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தொல்.திருமாவளவன் தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈழத் தமிழா் பிரச்னையில் தமிழக தலைவா்கள் அரசியல் செய்தனா் என்றும்

தமிழக தலைவா்கள் மீது பிரபாகரன் நம்பிக்கை இழந்துவிட்டிருந்ததாகவும் கூறியுள்ளாா். இதன் மூலம் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூா் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற தலைவா்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியது போன்ற தோற்றத்தை திருமாவளவன் நிறுவுகிறாா். இது நியாயம்தானா?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழக அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டு விடும். பாஜக உள்ளிட்ட சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் தி.மு.ராஜேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்!

ரய்சி இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

SCROLL FOR NEXT