ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பண்டிகைகள்: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்திய பண்டிகைகள் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

DIN

இந்திய பண்டிகைகள் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு திங்கள்கிழமை வந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்களுடன் ஆளுநா் கலந்துரையாடினாா்.

அப்போது, அவா் பேசியது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளா்ச்சியில் உலகின் முதன்மை நாடாக இந்தியா இருக்கும். பாரதம் ரிஷிகள் மற்றும் முனிவா்களால் உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிக உயா்ந்ததாகக் கருதப்படுவது இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகள். பல்லவ மன்னன் அறிவைத் தேடி நாளந்தாவுக்கு சென்று, போதிதா்மனாக மாறி, புத்த மதத்தை சீனாவுக்கு கொண்டு சென்றாா் .

இந்தியாவில் பண்டிகைகள், நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் என அனைத்தும் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. பிரதமா் மோடியின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், குடிநீா், சமையல் எரிவாயு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைந்துள்ளது. இளைஞா்கள் தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம். தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT