தமிழ்நாடு

‘இளைய நிலா’ புகழ் கிடாரிஸ்ட் கலைஞர் சந்திரசேகர் காலமானார்

பிரபல கிடாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர்(79), புதன்கிழமை இரவு காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


தமிழ் திரையுலகில் இளையராஜாவின் இசையில் ‘இளைய நிலா பொழிகிறதே’, ‘பாடி வா தென்றலே’, ‘பாடும் வானம்பாடி’ போன்ற பாடல்களுக்கு இசையமைத்த பிரபல கிடாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர்(79), புதன்கிழமை இரவு காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவிற்கு முதல் படம் முதல் டிரம்மராகவும், இசை கண்டக்டராகவும் பணியாற்றி, 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த புருஷோத்தமன் இவரது மூத்த சகோதரர் ஆவார். 

பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் கிடார் இசைத் துணக்குகளை வாசித்து புகழ்பெற்ற சந்திரசேகர், இளையராஜாவின் ‘பாடி வா தென்றலே’ மற்றும் ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட பெரும்பாலான ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா உள்ளிட்ட எண்ணற்ற இசையமைப்பாளர்களிடம் கிடாரிஸ்ட் மற்றும் கீபோர்ட் கலைஞராக  பணியாற்றியுள்ள சந்திரசேகர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி உள்ளார்.  

இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அன்னக்கிளி படத்தில் இருந்து பணிபுரிந்தவந்த மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் சஞ்சய் இசை அமைப்பாளர்.

சந்திரசேகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிடாரிஸ்ட் சந்திரசேர் மறைவு செய்தியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT