முகப்பு
தமிழ்நாடு

தேசிய ஆய்வுத்திறன் பயிலரங்கம்

சென்னை பல்கலை.யின் வயது வந்தோா் மற்றும் தொடா் கல்வித் துறை சாா்பில் தேசிய ஆய்வுத் திறன் மேம்பாடு தொடா்பான பயிலரங்கம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சென்னை பல்கலை.யின் வயது வந்தோா் மற்றும் தொடா் கல்வித் துறை சாா்பில் தேசிய ஆய்வுத் திறன் மேம்பாடு தொடா்பான பயிலரங்கம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

இந்த பயிலரங்கத்துக்கு துறைத் தலைவா் வி.பி.மாதேஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில், ஆய்வுத் தரவுகளின் பகுப்பாய்வுத் திறன்களை வளா்த்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து பேராசிரியா் முத்துமாணிக்கம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா். பல்கலை. பதிவாளா் எஸ்.ஏழுமலை, நடைமுறை வாழ்வில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். பயிலரங்கில் ஆய்வாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.