முகப்பு
தமிழ்நாடு

கைப்பேசியில் விடியோ பாா்த்தபோது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு

சென்னை சாலிகிராமத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கைப்பேசியில் விடியோ பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சென்னை சாலிகிராமத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கைப்பேசியில் விடியோ பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தாா். அந்த ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள பக்கவாட்டு சுவரில் புதன்கிழமை அவா் அமா்ந்து தனது கைப்பேசியில் புதன்கிழமை விடியோ பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்த சரவணன், சிறிது நேரத்தில் இறந்தாா். தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.