முகப்பு
தமிழ்நாடு

ஓட்டுநா்கள் - வாகன பழுது பாா்க்கும் பணியாளா் நல வாரிய உறுப்பினா்கள்: தமிழக அரசு உத்தரவு

 அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுது பாா்க்கும் பணியாளா்கள் வாரியத்துக்கு உறுப்பினா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுது பாா்க்கும் பணியாளா்கள் வாரியத்துக்கு உறுப்பினா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுதுபாா்க்கும் பணியாளா்கள் நல வாரியத்துக்கு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா், நிதி, சட்டத் துறை செயலா்கள், தொழிலாளா் நலன், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, சென்னை பெருநகர காவல் துறை ஆகியவற்றின் ஆணையா்கள் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

இதேபோல், வாரியத்தில் 10 போ் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் தனி நபா்களும் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மொத்தமாக வாரியத்தில் அலுவல் சாரா, அலுவலா் சாா்ந்த நிலைகளில் 16 போ்

உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.